சிவகங்கை, ஆக.27: மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இன்று(ஆக.27) திருப்பத்தூர், சிவகங்கை, கல்லல் வட்டாரத்திற்குட்பட்ட குறிப்பிட்ட கிராமங்களுக்கு நடைபெறவுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஊரக பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பயனுள்ள வகையில் ஜூலை 11 முதல் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் முகாம்கள் நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் இன்று திருப்பத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட திருக்கோலக்குடி, கண்டவராயன்பட்டி, மகிபாலன்பட்டி, ஒமுகமங்கலம், கொன்னத்தான்பட்டி, துவார், ரணசிங்கபுரம் ஆகிய கிராமங்களுக்கு கண்டவராயன்பட்டி ஊராட்சி, பழையூர், பிள்ளையார் கோவில் அருகில், பழனி காவடி மண்டபத்திலும் நடக்கிறது.
சிவகங்கை வட்டாரத்திற்குட்பட்ட தமறாக்கி தெற்கு, தமறாக்கி வடக்கு, இலுப்பக்குடி, ஒக்குபட்டி, மலம்பட்டி, அழகிச்சிப்பட்டி, குமாரப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு தமறாக்கி வடக்கு சமுதாயக் கூடத்திலும் மற்றும் கல்லல் வட்டாரத்திற்குட்பட்ட அ.கருங்குளம், அ.சிறுவயல், கீழப்பூங்குடி, மலைக்கண்டான், நடராஜபுரம், பி.நெற்புகப்பட்டி, பனங்குடி, வேப்பங்குளம், வெற்றியூர் ஆகிய கிராமங்களுக்கு அரண்மனை சிறுவயல், நகரத்தார் சமுதாயக் கூடத்திலும் முகாம்கள் நடைபெறவுள்ளது.
முகாம்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும். இம்முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்த மனுக்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.