காரைக்கால்,ஆக.20: திருப்பட்டினத்தில் பாசன வசதிக்காக காவிரி தண்ணீரை நாக. தியாகராஜன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.காவிரி தண்ணீர் காரைக்கால் மாவட்டம் திருமலைராஜனார் மானாம்பேட்டை தலைப்பிற்கு வந்து சேர்ந்ததை முன்னிட்டு நிரவி – திருபட்டினம் பாசன பகுதி 5809 ஏக்கர் விவசாய பயன்பாட்டிற்கு தண்ணீர் நிரவி திறந்து திருபட்டினம் விடப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சிக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாக.தியாகராஜன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். மேலும் நிகழ்ச்சியில் காரைக்கால் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன், நீர்பாசனம் மற்றும் பொதுசுகாதாரக் கோட்ட நிர்வாகப் பொறியாளர் மகேஷ், உதவிப்பொறியாளர் ராஜசேகரன், இளநிலை பொறியாளர்கள் சுந்தரவடிவேலு மற்றும் நிரவி திருபட்டினம் விவசாய சங்கத்தினர், பொதுமக்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.