காரைக்கால்,ஆக.21: திருப்பட்டினத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகைள நாக.தியாகராஜன் எம்எல்ஏ வழங்கினார்.காரைக்கால் மாவட்டம் நிரவி திரு.பட்டினம் தொகுதி நடுக்களம் பேட் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நாகதியாகராஜன் கலந்துகொண்டு தலைமை வகித்து மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சீருடை மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினார்.மாணவ, மாணவிகளிடம் நாக.தியாகராஜன் எம்எல்ஏ பேசுகையில், இளம் பருவத்தில் நீங்கள் நன்றாக படிக்க வேண்டும். படிப்பு ஒன்றே கவனமாக கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். பின்னர் சட்டமன்ற உறுப்பினர் நாக.தியாகராஜன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.