சாத்தூர், ஜூன் 4: சாத்தூர் அருகே இ.குமாரலிங்காபுரம் பகுதியில் திருநங்கைகளுக்கு அரசு இலவசமாக வீடு கட்டி கொடுத்துள்ளது. இங்கு திருநங்கைகள் இடையே கடந்த மே 31ம் தேதி சங்க நிர்வாகியான அமீர்பாளையம் கருப்பசாமி கோயில் தெருவை சேர்ந்த திருநங்கை ஓவியா (29) என்பவருக்கும், சிவகாசியை சேர்ந்த சோனா என்ற திருநங்கைக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஓவியா வீட்டிற்கு சோனா அரிவாளுடன் சென்று வெட்டி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். மேலும் அவர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஓவியாவுக்கு காயம் ஏற்பட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் சோனா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருநங்கை மீது வழக்கு
0