திருத்துறைப்பூண்டி, ஆக. 21: திருத்துறைப்பூண்டி வரதராஜ பெருமாள் கோயிலில் மட்டை தேங்காய் வழிபாடு நடைபெற்றது.வேண்டிய வரங்கள் தந்து அருளும் வரதராஜ பெருமாள் சன்னதியில் அருள்பாலித்து வரும் வைராக்கிய ஆஞ்சநேயர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மட்டை தேங்காய் வழிபாட்டின் மூலம் தடைபட்ட காரியங்களை நிறைவேற்றி தருகிறார்.1/2 (அரை)மீட்டர் சிவப்பு துணியில் உரிக்காத முழுதேங்காயை வைத்து ஒரு சீட்டில் பிரார்த்தனை யை எழுதி அர்ச்சகரிடம் கொடுத்து பூஜை செய்து வேண்டி கொண்டால் 2 மண்டலத்திற்குள் வேண்டிய காரியத்தை நிச்சயம் நிறைவேற்றி தருவார்.
மேலும் திருமணத் தடை நீங்கிடவும், குழந்தை பாக்கியம் உண்டாகவும், உத்யோகம் கிடைக்க பெற வேண்டியும். வீடு கட்டவும் எதிரிகள் தொல்லை நீங்கிடவும் வெளிநாடு உத்யோகம் கிடைத்திடவும் . மனச்சங்கடங்கள் குறையவும். பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு கடன் தீரவும் கணவன், மனைவி ஒற்றுமை போன்ற நியாயமான கோரிக்கைகளாக இருத்தல் வேண்டும்.
தாங்கள் எழுதிய வேண்டுதல் நிறைவேறியவுடன் வந்து ஆஞ்சநேயரு க்கு அபிஷேகம் செய்து நிவ ர்த்தி செய்து கொள்ள வேண்டும். மேலும் இந்த வழிபாடு முக்கிய விஷேசங்கள் தவிர்த்து மற்ற எல்லா நாட்களும் நடைபெறும் என்று வெங்கடேஷ் பட்டா ச்சாரியார் தெரிவித்துள்ளார். நினைத்த காரியம் நிறைவேறுவதால் பக் தர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.