திருத்துறைப்பூண்டி, நவ. 18: திருத்துறைப்பூண்டியில் சாலை தெரியாமல் மழைநீர் ஓடியது. தண்ணீரை வடிய வைத்ததால் போக்குவரத்து சீரானது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வேளூர், மடப்புரம், நெடும்பலம், பாமணி,கட்டி மேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பகுதிகளிலும் நேற்று மதியம் முதல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கன மழை பெய்தது குறிப்பாக திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் பெய்த மழையின் காரணமாக பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் நாகை சாலை சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.தொட ர்ந்து தண்ணீர் தேங்கிய பகுதிகளை உடனடியாக நகராட்சி சார்பில் பணியாளர்கள் மழை நீரை அப்புற ப்படுத்தும் பணியில் ஈடுப ட்டு தண்ணீரை வடிய வை த்தனர். தண்ணீரை உடனடியாக வடிய வைத்ததால் போக்குவரத்து சீரானது.