திருத்துறைப்பூண்டி, மே 27: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் கோயிலில் கஜசம்ஹாரமூர்த்திக்கு சாமிக்கு நேற்று அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர். உழவாரப்பணிக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கஜசம்ஹாரமூர்த்திக்கு அமாவாசை நாட்களில் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால் முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைவதுடன் வாழ்க்கையில் முன்னேற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தமிழ்நாட்டில் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் கோயிலில் மட்டுமே ஒரே கல்லிலால் ஆன கஜசம்ஹாரமூர்த்தி சிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.