திருத்துறைப்பூண்டி, ஆக. 22: நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் இளம்வழுதி அறிவுறுத்தலின் படி தஞ்சாவூர், மன்னார்குடி சாலையில் உள்ள திருத்துறைப்பூண்டி சாலையில் சிறிய பாலங்கள் இருபுறமும் உள்ள மரங்கள் மற்றும் மின்கம்பங்களுக்கு நெடுஞ்சாலை துறை சார்பில் கருப்பு வெள்ளை வண்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல திருவாரூர் சாலையில் உள்ள சிறிய பாலங்கள், மின்கம்பங்கள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நடைபெற்று வரும் பணிகளை உதவி கோட்ட பொறியாளர் அய்யாத்துறை, இளநிலைப் பொறியாளர் ரவி ஆகியோர் பார்வையிட்டனர்.