திருத்துறைப்பூண்டி, ஆக.24: திருவாரூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்த காய்கறி மார்கட் புதிய பேருந்து நிலையம் வந்த பின்னர் தினசரி காய்கறி அங்காடியாக இயங்கி வந்தது. இந்த ஆண்டு ஜனவரி-5ல் புதிய காய்கறி மார்க்கெட் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.இதில் புதிய பேருந்து நிலையம் அருகில் ரூ.295.40 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 50 கடைகள் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.
தற்போது பழைய பேருந்து நிலையம் இடத்தில் 2024-25ம் ஆண்டிற்கு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.609.00 லட்சம் மதிப்பீட்டில் தரைதளத்தில் 21 கடைகள் மற்றும் முதல் தளத்தில் 21 கடைகள், வாகனம் நிறுத்தும் இடம், கழிவறை போன்ற வசதிகளுடன் புதிய வணிக வளாகம் கட்டிட நிர்வாக அனுமதி, நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்று டெண்டர் பெறப்பட்டது. இதற்கான பூமி பூஜை திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, நகர்மன்றத் தலைவர் கவிதாபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இதில டிஎஸ்பி பாஸ்கரன், நகராட்சி ஆணையர் பிரபாகரன், பொறியாளர் பிரதான் பாபு, நகராட்சி துணை தலைவர் ஜெயபிரகாஷ், நகராட்சி நியமன குழு உறுப்பினர் ஆர்.எஸ்.பாண்டியன், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் எழிலரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் கோபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் சுந்தர், அதிமுக நகர செயலாளர் சண்முகசுந்தர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள். நகராட்சி அனைத்துப் பணியாளர்கள், நகராட்சி ஒப்பந்ததாரர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.