திருத்துறைப்பூண்டி, மே 24: திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி, தஞ்சை, திருச்சி வழியாக திருப்பூருக்கு தொலை தூர பேருந்து சேவை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழச்சியில் எம்எல்ஏ மாரிமுத்து, நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் ஆகியோர் பேருந்து சேவையை துவக்கி வைத்தனர். இதில் அரசு போக்குவரத்து கழகம் நாகை மண்டல பொது மேலாளர் ராஜா, கிளை மேலாளர் ஜெய்சங்கர், தொமுச கிளை செயலாளர் அருணகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.