திருத்துறைப்பூண்டி, செப்.1: திருத்துறைப்பூண்டி நகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நட்ந்தது. நகர அவைத் தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினரும் நகர செயலாளருமான ஆர்.எஸ்.பாண்டியன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ ஆடலரசன், நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், முன்னாள் ஒன்றிய செயலாளர் முகில் ராஜேந்திரன், மாவட்ட வர்த்தகரணி துணை அமைப்பாளர் சிக்கந்தர், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல் , பன்னீர்செல்வம், ஜாகிர் உசேன், சுந்தர், முருகேசன் மற்றும் நகர, வார்டு நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் அண்ணாதாசன் 80வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கௌரவிக்கப்பட்டார். கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிட்ட ஒன்றிய அரசுக்கும் முழு முயற்சி எடுத்த தமிழ்நாடு முதல்வருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. தமிழக மாணவர்களின் நலன் கருதி தமிழ் புதல்வன் திட்டம் கொண்டு வந்த முதல்வருக்கு நகர திமுக சார்பாக நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.