திருத்துறைப்பூண்டி, நவ. 17: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சுருக்க திருத்தம் 2025 முகாம் 68 வாக்குசாவடி மையங்களில் நடைபெற்றது. வேளூர் வாக்கு சாவடி மையத்தில் நடைபெற்ற முகாமை தாசில்தார் குருமூர்த்தி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் கார்த்தி கோயன் பார்வையிட்டனர்.