திருத்துறைப்பூண்டி, செப். 4: திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் 39 புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்போர் மையங்களின் துவக்க விழா நடைபெற்றது. இந்த திட்டத்தின் நோக்கம் ஒன்றியத்தில் உள்ள 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும், எழுத படிக்க தெரியாதவர்கள் இனம் கண்டு அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவும், எண்ணறிவும் அளிப்பதே ஆகும்.
திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் 668 எழுத, படிக்க தெரியாதவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு 39 மையங்களில் தன்னார்வலர்கள் மூலம் 6 மாத காலத்திற்குள் அடிப்படை எழுத்தறிவும் எண்ணறிவும் அளிக்கப்பட இருக்கிறது. இத்திட்டத்தை பனையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் அறிவழகன் துவக்கி வைத்தார்.