திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில் பண்ணை தெரு தூய்மை செய்யப்பட்டது. பணியை பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் மதிவாணன் தொடங்கி வைத்தார். ஆய்வக உதவியாளர் முருகவேல் முன்னிலையில் பள்ளி வளாகம் முழுவதும் தூய்மை பணி நடைபெற்றது. தொடர்ந்து பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தனபாலன், அன்புக்குமார் மற்றும் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலையில் நெடும்பலம் கடைத்தெரு பகுதி மற்றும் பண்ணை தெரு ரயிலடி தெரு ஆகிய பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட கலெக்டர் தகவல்