திருத்துறைப்பூண்டி, ஆக. 22: திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட 166. திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்ககளுக்கு திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வீடு வீடாக ஆய்வு செய்வது தொடர்பான பயிற்சி கூட்டம் மன்னார்குடி ஆர்டிஓ கீர்த்தனாமணி தலைமையில் நடைபெற்றது. இதில் தாசில்தார் கார்ல் மார்க்ஸ், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.