திருத்துறைப்பூண்டி, ஆக. 22: திருத்துறைப்பூண்டி தெற்கு வீதியில் உள்ள ரேஷன் கடை முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நகர செயலாளர் கோதாவரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் பிரதான கோரிக்கையான கடந்த மூன்று மாத காலமாக ரேஷன் கடைகளில் ஆயில், மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் முறையாக வழங்காததை கண்டித்தும், ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் தட்டுப்பாடு இன்றி வழங்கிட வலியுறுத்தியும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ரேஷன் கடை வாசல் முன்பு கும்மி அடித்து கோஷங்களை எழுப்பி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.