திருத்துறைப்பூண்டி, செப். 20: திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம். மீனாட்சி மருத்துவமனை சார்பில் பொது மருத்துவ முகாம் புனித தெரசாள் மேல் நிலைபள்ளியில் நடைபெற்றது. தலைவர் கணேசன் தலைமை வகித்தார்.முகாமை ரோட்டரி மாவட்ட துனை ஆளுனர் அறிவழகன் துவக்கி வைத்தார். முன்னாள் தலைவர்கள், உறுபினர்கள் கலந்து கொண்டனர். நூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதில் 72 பேருக்கு இசிசி பரிசோதனை செய்யபட்டது. ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு கண்டறியப்பட்டது. முடிவில் சதா பத்மநாதன் நன்றி கூறினார்.