திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி திருவாரூர் சாலை வேளூர் பாலத்திலிருந்து நாகை பைபாஸ் சாலை வரை புறவழிச்சாலை மேம்படுத்தும் பணிக்கு ரூ.20.40 கோடி நிதி தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. நெடுஞ்சாலைதுறை சார்பில் புறவழிச்சாலை பணிகள் கடந்த மே மாதம் துவங்கியது. இந்த சாலையில் 19 சிறுப்பாலங்கள் (கல்வெட்டு)அமைக்கும் பணியில் 19 பாலங்கள் பணி முடிந்துவிட்டது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் புறவழிச்சாலையில் தார்சாலை அமைப்பதற்கான பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்நிலையில் நெடுஞ்சாலைதுறை திருவாரூர் உதவி கோட்ட பொறியார் (தர கட்டுபாடு) சீனிவாசன், உதவி பொறியாளர் ஹேமலதா ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலைதுறை இளநிலை பொறியாளர் ரவி, சாலை ஆய்வாளர் பூபதி மற்றும் சாலை பணியாளர்கள் கலந்துகொண்டனர்….