திருத்தணி: திருத்தணியில் சிறப்பு பெற்ற முருகன் கோயிலில், விடுமுறை நாளான நேற்று அதிகாலை முதல் மாலை வரை பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பொது வரிசையில் சுமார் 2 மணி நேரமும், ரூ.100 கட்டண வரிசையில் 1 மணி நேரமும் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, அதிகாலை மூலவருக்கு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு தங்ககவச அலங்காரத்தில் சாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.
மாலையில் வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் முருகப்பெருமான் உபயதாரர்கள் மூலம் தங்கத்தேர் பவனி நடைபெற்றது. நேற்று அதிகாலை முதல் இரவு வரை சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியல்களில் நகை, பணம், பொருட்கள் காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.