திருத்தணி, ஆக. 19: திருத்தணி முருகன் கோயிலில் ஆவணி அவிட்டமான இன்று மதியம் 12 மணி முதல் மாலை 4 வரை வரை சாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
திருத்தணியில் புகழ்ப்பெற்ற முருகன் கோயிலில் ஆவணி அவிட்டம், பவித்ர உற்சவ விழாவை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ள நிலையில், பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கோயில் நடை அடைக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாலை 4 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.