திருத்தணி:திருத்தணி முருகன் மலைக்கோயிலில், கடந்த, 2017 ஆண்டு வரை தனி நபர் ஒருவர் ஆண்டுதோறும் ஏலம் எடுத்து பிரசாதக்கடை நடத்திவந்தார். அதன்பிறகு 6 ஆண்டுகளாக கோயில் நிர்வாகம் நடத்தி வந்தது. நடப்பாண்டிற்கான பிரசாதக்கடை ஏலம் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில், சென்னையை சேர்ந்த தனிநபர் ஒருவர், ரூ.2 கோடி 50 லட்சத்திற்கு பிரசாதக்கடை ஏலம் எடுத்தார். கடந்த 6 ஆண்டு பிறகு தனிநபருக்கு பிரசாத கடை மாறியுள்ளது குறிப்பிடதக்கது. இதேபோல், திருத்தணி கோயில் தலைமுடி காணிக்கை சேகரிக்கும் ஏலத்தையும் சென்னை சேர்ந்த தனிநபர் ரூ.2.22 கோடி ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.