சிவகாசி: திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் உறியடி உற்சவம், வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகாசியில் திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி உற்சவம் மற்றும் வழுக்குமரம் ஏறுதல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு யாதவர் குல சமூகத்தார் சார்பாக 79ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி நடைபெற்றது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கண்ணபிரான், நின்ற நாராயண பெருமாள், செங்கமலத்யாருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. கோயிலில் 40 பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்ட பரதநாட்டியம் நடைபெற்றது. திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயில் முன்பு வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் போட்டி போட்டு வழுக்கு மரம் ஏறினர். அவர்கள் மீது மஞ்சள்நீரை பக்தர்கள் தெளித்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.