நாமக்கல், ஜூன் 17: சேலம் மாவட்டம், பொன்னம்மாபேட்டை புதிய மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் மணி, ராஜேஷ். இவர்கள் இருவர் மீதும், நாமக்கல் காவல் நிலையத்தில், திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை, நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால், இருவரும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து, தலைமறைவாக இருந்து வருகின்றனர். இதையடுத்து நீதிமன்றம், மணி, ராஜேஷ் ஆகிய இருவரையும் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. வரும் ஜூலை 14ம்தேதி காலை 10 மணிக்குள், இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இல்லை என்றால் போலீசார் இருவரையும் பிடித்து ஆஜர்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இவர்களை பற்றி தகவல் தெரிந்தவர்கள், நாமக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என நாமக்கல் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
திருட்டு வழக்கில் 2 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
0
previous post