செங்கோட்டை, ஆக. 31: திருட்டு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். செங்கோட்டை விஸ்வநாதபுரம் புதுமனை தெருவை சேர்ந்த காஜா மைதீன் மகன் அப்துல் ரசாக் (37). இவர் மீது கடந்த 2013ம் ஆண்டு நடந்த திருட்டு வழக்கில் கடந்த 13ம் தேதி செங்கோட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சுனில் ராஜா மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து தலைமறைவாக இருந்த அப்துல் ரசாக்கை செங்கோட்டை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.