சென்னை: திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது முருக பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இந்த கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு குடமுழுக்கு மற்றும் கோவில்கள் பராமரிப்பு பணிகளை செய்து வருகிறது. அந்த வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலுக்கு கூட முழுக்க விழா நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு 07-07-2025 அன்று நடைபெறவுள்ளது.இதனையொட்டி பொதுமக்கள் பங்கேற்க வசதியாக 04-07-2025 5 08-07-2025 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் ஏன் போக்குவரத்துதுறை அறிவித்துள்ளது. அந்த வகையில் முன்பதிவு செய்ய QR Code – ஸ்கேன் செய்யவும் அமைச்சர் தகவல் தெரிவித்தார்.