திருச்செங்கோடு, ஜூன்2: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில், நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. ஜேடர்பாளையம், சோழசிராமணி, இறையமங்கலம், கொடுமுடி, பாசூர், அந்தியூர், துறையூர், தம்மம்பட்டி, உப்பிலியாபுரம், ராயவேலூர், செய்யார், தலைவாசல் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தனி வாகனங்களில் 1335 மூட்டை மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.10,839 முதல் ரூ.14,598 வரையிலும், கிழங்கு மஞ்சள் குவிண்டால் ரூ.8,111 முதல் ரூ.13,339 வரையிலும், பனங்காளி மஞ்சள் குவிண்டால் ரூ.13,600 முதல் ரூ.29,899 வரையிலும் விற்பனையானது. ஒட்டு மொத்த மாக விவசாயிகள் கொண்டு வந்த 1,335 மூட்டை மஞ்சள் ரூ.1.07 கோடிக்கு விற்பனை ஆனது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருச்செங்கோட்டில் ரூ.1.07 கோடிக்கு மஞ்சள் விற்பனை
0