திருச்சுழி, நவ.4: திருச்சுழியில் உள்ள சேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டு வரும் கலைத் திருவிழாவின் ஒரு பகுதியாக தமிழ்க்கூடல் நிகழ்ச்சி திருச்சுழி நூலகத்தில் நடத்தப்பட்டது. இப்பள்ளியின் முதுகலைத் தமிழாசிரியர் சம்பத்குமார் வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினராக வந்திருந்த அறந்தாங்கி அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் சிவக்குமார் சிங்காரவேல் தமிழரின் வரலாறும் பண்பாடும் பற்றி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் பொறுப்பாளர் முனைவர் செல்வலட்சுமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பட்டதாரி ஆசிரியை தேவி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் நூலகர் பாஸ்கரன் கலந்து கொண்டு, சிறப்பு விருந்தினருக்கும், ஆசிரியர்களுக்கும் நூலகத்தின் சார்பாக பொன்னாடை போர்த்தி கவுரவப்படுத்தினர். வாசகர் ஒருங்கிணைப்பாளர் சுந்தர் அழகேசன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்திருந்தார். நூலகப் பணியாளர் பாண்டிதேவி, வாசகர் வட்டத்தைச் சேர்ந்த பாக்கியராஜ், வீரராஜன், விக்னேஷ் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.