திருச்சி, ஜூலை 21: தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளராக அன்பழகன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளராக அன்பழகன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது 30 ஆண்டுகால ரயில்வே சேவையில், இவர் மெட்டீரியல் பிரிவில் திருச்சி பொன்மலைப் பணிமனையில் உதவி மேலாளராகவும், மூத்த துணை மேலாளராகவும், ெதன்னக ரயில்வேயின் தலைமை அலுவலகத்தின் மூத்த மேலாளராகவும், பெங்களுர் ரயில் சக்கர உற்பத்தி ஆலையில் மூத்த மேலாளராகவும் இறுதியாக சென்னை ஐசிஎப் ஆலையில் மூத்த மேலாளராகவும் பணியாற்றி உள்ளார். மேலும் இவர் சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளில் நவீன மேலாண்மை பயிற்சி பெற்றுள்ளார்.
இவர் தன்னுடைய சிறப்பான பணிக்காக மத்திய ரயில்வே அமைச்சகத்தின் விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது. இந்நிலையில் தெற்கு ரயில்வே அமைச்சகம் அவரை திருச்சி ரயில்வே கோட்ட மேலாளராக நியமித்து உத்தரவிட்டது. திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகத்தில் கோட்ட மேலாளராக அன்பழகன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அனைத்து மூத்த கிளை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். மேலும் அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகள் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார். இத்தகவலை திருச்சி ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.