திருச்சி, ஜூலை 5: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்புதுறை வாயிலாக திருச்சி, புத்தூர் பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளியில் வரும் 9ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருச்சி இந்திரா காந்தி கல்லூரியில் வரும் 10ம் தேதி மகளிருக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி, வரும் 11ம் தேதி பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியருக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி, வரும் 14ம் தேதி முற்பகல் திருச்சி, தேசிய கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி, அன்று பிற்பகல் திருச்சி, துவாக்குடி அரசு தொழில்நுட்ப கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.