திருச்சி, ஜூன் 16: திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று அருணாச்சல மன்றத்தில் நடந்தது. மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமை வகிக்தார். இதில் தேசிய செயலாளர் கிரிஸ்டோபர் திலக் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். திருச்சி பாராளுமன்ற பொறுப்பாளர் பென்னட் அந்தோணிராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள், ஒருவர் பின் ஒருவராக, கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த தேவையான யுக்திகளை வழங்கினர். ராகுல் காந்தி எம்பியின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு வார்டுகள் தோறும் கொடியேற்றி, ஏழை மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து, ரத்த தானம் வழங்கி, மாணவ மாணவிகளுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கி, மரக்கன்றுகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
நிகழ்வில் மாவட்ட பொருளாளர்கள், மாவட்ட பொது செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், கோட்ட தலைவர்கள், ஐடி பிரிவு மாவட்ட தலைவர்கள், ஆராய்சி துறை மாவட்ட தலைவர், ஊரக பிரிவு செந்தில், அமைப்பு சாரை தலைவர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.