திருச்சி செப்.25: திருச்சி மாநகராட்சி குறைதீர் கூட்டம் இன்று நடைபெறாது என்று மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெறும். இதில் மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் தங்களுடைய புகார்களை மனுக்கள் மீது உடனடியாக அதிகாரிகளின் உதவியுடன் அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (25ம் தேதி) திங்கட்கிழமை மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது என மாநகராட்சி சார்பில் அறிவிக்கபட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பிரில்லியன்ட் கன்வென்ஷன் சென்டரில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் இந்தூர் ஸ்மார்ட் சிட்டி டெவலப்மென்ட் லிமிடெட் சார்பாக நடைபெறும் நிகழ்ச்சியில் திருச்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளதால் இன்று (திங்கட்கிழமை நடைபெறுவதாக இருந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.