திருச்சி, மே 24: திருச்சி பொன்னகர் பகுதி தி.மு.க. சார்பில் பெரியமிளகுபாறையில் நாடு போற்றும் நான்கு ஆண்டு சாதனை தொடரட்டும் பல்லாண்டு தெருமுனை பிரசார கூட்டம் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்துக்கு பகுதி செயலாளர் மோகன்தாஸ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், தலைமை கழக பேச்சாளர் தா.பழூர் இளஞ்செழியன் கலந்து கொண்டு பேசினார்கள்.கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி பேசுகையில், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. தி.மு.க. மக்களோடு மக்களாக இருக்கக்கூடிய இயக்கம். இந்த மகளிர் தான் 2026-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றியை வழங்கப்போகிறார்கள் என்றார்.இதனை தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு, தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கும்வகையில் நாடு போற்றும் நான்கு ஆண்டு சாதனை தொடரட்டும் பல்லாண்டு என்ற தலைப்பில் கையேடு வழங்கப்பட்டது. முன்னதாக 54-வது வார்டு செயலாளர் மூவேந்திரன் வரவேற்றார். முடிவில் பகுதி அவைத்தலைவர் பவுன்ராஜ், பகுதி துணை செயலாளர் மோகன் ஆகியோர் நன்றி கூறினர்.