திருச்சி, ஜூன் 15: திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியில் போதை மாத்திரை விற்பதாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பாலக்கரை போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் சோதனையிட்டனர். அப்போது அங்கு போதை மாத்திரை விற்ற ரவுடி மேத்யூ(24) மற்றும் பிரின்ஸ்(24) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.