திருவெறும்பூர், நவ.17: திருவெறும்பூர் தொகுதியில் முடிவுற்ற பல்வேறு பணிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார். திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர், கும்பக்குடி வேலாயுதங்குடி ஆகிய பகுதிகளில் மின் மாற்றியையும் நவல்பட்டு காவேரி நகர் 170 குடும்ப அட்டைதாரர் பயன்பெறும் வகையிலும், சூரியூர் பகுதியில் 500 குடும்ப அட்டைதாரர் பயன்பெறும் வகையிலும் நியாய விலைக்கடைகளை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் கங்காதரணி சேர்மன் சத்யா கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர் கங்காதரன், பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி திருவெறும்பூர் பகுதியில் முடிவுற்ற அரசு திட்டப்பணி அமைச்சர் திறந்து வைத்தார்
0