காங்கயம், செப். 2: காங்கயத்தில் திருச்சி-கோவை சாலையில் அகிலாண்டபுரம் மற்றும் அய்யாசாமி நகர் காலனி பிரிவு நால்ரோட்டிற்கு அருகே 50 வருடங்களாக வேப்பமரம் ஒன்று இருந்தது. வானுயர வளர்ந்த மரத்தின் கிளைகள் சாலையின் குறுக்கே நீட்டிக் கொண்டிருந்தது. இதன் கிளைகள் அவ்வழியாக செல்லும் பேருந்துகள், லாரிகள் மற்றும் கனரக வாகனங்களின் மீது மோதி கொண்டிருந்தது.
இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணி அளவில் கிளையின் மீது அவ்வழியாக சென்ற சரக்கு லாரி வண்டியின் மேற்கூறையில் சிக்கி முறிந்து கடைகள் மீதும், மின்கம்பிகளின் மீதும் விழுந்தது. இதனால், மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், இருவழி சாலையில் ஒரு வழி அடைக்கப்பட்டு ஒரு வழியில் செல்லும்படி வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.