திருச்சி, ஜூன் 18: திருச்சி ரயில்வே குட்செட் சுமைதூக்கும் தொழிலாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் ரயில் வேகன்களில் நெல் கொண்டு வராத காரணத்தால் வேலையிழந்து பரிதவிப்பதால் தாங்கள் தலையிடக் கோரி மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை இறக்கி அரவைக்காக திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள ரைஸ் மில்களுக்கு லாரிகளில் ஏற்றிவிடும் பணியை செய்து வரும் நிலையில், இந்த பணியில் சுமை தொழிலாளர்கள் 150 பேரும், லாரி ஓட்டுநர்கள், இதர பணியாளர்கள் 100 பேரும், நேரடியாகவும், மறைமுகமாகவும் 100 பேரும் என இந்த வேலையை மட்டும் நம்பி வாழ்ந்து வருகின்றனர். திருச்சி குட்செட் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கிட கூடுதல் நெல்லோடு கொண்டு வரக்கேட்டு சிஐடியு சங்கத் தலைவர் சேகர் தலைமையில் மனு கொடுக்கும் இயக்கம் நடந்தது. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
திருச்சி குட்செட் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மனு கொடுக்கும் இயக்கம்
0
previous post