திருச்சி, அக்.17: திருச்சியில் உள்ள ஓட்டலில் பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஓட்டலில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதன்பேரில் அந்த ஓட்டலுக்கு சென்று கண்டோன்மென்ட் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டலில் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.
இதையடுத்து பணம் வைத்து சூதாடியதாக வரகனேரியை சேர்ந்த விஸ்வாசம்(46), ஓலையூரை சேர்ந்த கருப்பையா(39), தென்னூரை சேர்ந்த பாலகிருஷ்ணன்(41), புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூரை சேர்ந்த லோகநாதன்(37) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல், திருச்சி கே.கே.நகர் குமரன் தெருவில் சூதாடிய கிருஷ்ணகுமார்(51), வேலு(59) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.