திருச்சி,ஜூலை 2: திருச்சி அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர்.
திருச்சி வரகனேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சில வாலிபர்களுக்கும், பெரியார் நகரை சேர்ந்தவர்களுக்கும் ஏற்கனவே நடந்து முடிந்த கோவில் திருவிழா தொடர்பாக நேற்று இரவு திடீர் என பிரச்னை ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டதில் 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து காந்திமார்க்கெட் போலீசார் இரு தரப்பினரிடமும் தனித்தனியாக புகார் மனு பெற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.