திருச்சி, மே 28: திருச்சியில் மாவட்டம் மற்றும் மாநகர காவல்துறைகளில் பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்திலிருந்து அம்சவேணி கரூர் மாவட்டத்துக்கும், சமயபுரத்திலிருந்து விரமணி முசிறிக்கும், அங்கிருந்து மணிவண்ணன் துவாக்குடிக்கும் (இவர் ஏற்கெனவே பொறுப்பு ஆய்வாளராக உள்ளார்), மணப்பாறையிலிருந்து ரகுராமன் சமயபுரத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோல புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் மொத்தம் 22 இன்ஸ்பெக்டர்கள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவு குறித்த அறிவிப்பை திருச்சி டிஐஜி வருண்குமார் வெளியிட்டுள்ளார்.