திருச்சி, அக்.17: திருச்சியில் மாயமான 2 சிறுமிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகள் ராஜேஸ்வரி(17). இவர் 10ம் வகுப்பு வரை படித்து விட்டு வயர்லெஸ் ரோட்டில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 14ம்தேதி வேலைக்கு சென்ற ராஜேஸ்வரி வீட்டுக்கு திரும்பி வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல், திருச்சி பாலக்கரையை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகள் சீதாலட்சுமி(17). 12ம் வகுப்பு படித்து வரும் இவர் கடந்த 13ம்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். இதுகுறித்து, பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து சீதாலட்சுமியை தேடி வருகின்றனர்.