திருச்சி, ஜூன் 2: திருச்சி எடமலைப்பட்டி புதூர் கல்லுப்பட்டரை பகுதியை சேர்ந்த சிவமுருகன் மகன் தினேஷ்குமார் (17). பிளஸ்-2 படித்துள்ளார். இவர் நேற்று மதியம் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் சந்தோசுடன் முக்கொம்பு சுற்றுலா மையத்துக்கு வந்துள்ளார். பின்னர் இருவரும் காவிரி ஆற்றில் குளித்துள்ளனர்.
அப்போது ஆழமான பகுதியில் சிக்கிய தினேஷ்குமார் தண்ணீரில் மூழ்கி மாயமானார். இது குறித்து தகவலறிந்து சென்ற திருச்சி தீயனைப்பு துறையினர் தினேஷ்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் தேடிய நிலையில் இரவு நேரமானதால் தேடும் பணியை கைவிட்டு சென்றனர். இது குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.