திருச்சி, மே 21: திருச்சியில் போதை மாத்திரை விற்ற வழக்கில், பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி கோட்டை போலீசார், மே 19ம் தேதி போதை மாத்திரை விற்பனை குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மெயின்கார்டுகேட் பகுதியில் இருக்கும் பிரபல ஸ்டேசனரி கடை அருகில் இருக்கும் சாலையில் ஆய்வு நடத்தினர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நடமாடிய இருவரை பிடித்து விசாரித்து, சோதனை செய்ததில், அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் மதிப்பிலான 30 போதை மாத்திரைகள், ஒரு சிரின்ஜி மற்றும் தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட அரியமங்கலம் மலையப்ப நகர் அண்ணா தெருவை சேர்ந்த ஜோதி (37) மற்றும் இ.பி. ரோடு கீழ தேவதானத்தை சேர்ந்த மணிகன்டன்(40) ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.
திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது
0