சென்னை செப். 6: தனலட்சுமி சீனிவாசன் பைனான்ஸ் புதிய கிளை நேற்று தொடங்கப்பட்டது. பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் குழுமத்தின் புதிய நிறுவனமான தனலட்சுமி சீனிவாசன் பைனான்ஸ் தனது புதிய கிளையை திருச்சி மாவட்டம் சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. தனலட்சுமி சீனிவாசன் குழுமத்தின் நிறுவனரும், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தருமான சீனிவாசன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வருங்கால வேந்தர் நிர்மல் கதிரவன், குழும செயலாளர் நீலராஜ், குழும செயல் இயக்குனர் முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிறுவனத்தின் மூலம் உரிய ஆவணங்கள் கொண்டு கடன் உதவி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புதிதாக தொழில் தொடங்க முயலும் இளைஞர்கள் முதல் பெரியோர் வரை அனைவரும் இதன் மூலம் கடன் பெற்று தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ளலாம். தனிநபர்கள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை புதுமையான நிதி தீர்வுகளை வழங்குவதே இந்நிறுவனத்தின் நோக்கமாகும்.