திருக்கோவிலூர், ஆக. 31: திருக்கோவிலூர் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதி அரசு பேருந்து டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த வேலு மகன் வெங்கடேஷ் (53). இவர் திருவண்ணாமலை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை திருக்கோவிலூர் அருகே உள்ள அரும்பாக்கத்திலிருந்து பைக்கில் வீட்டுக்கு வந்தார். எதிரே பழங்கூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஏழுமலை (52) என்பவர் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக 2 பைக்குகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் அரசு போக்குவரத்து கழக டிரைவர் வெங்கடேஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ஏழுமலையை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று ஏழுமலை உயிரிழந்தார். இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர் அருகே ைபக் விபத்தில் அரசு பஸ் டிரைவர் உள்பட 2 பேர் பலி
previous post