கீழ்வேளூர் மே 25: நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த 21ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து வைகாசி பிரம்மோற்சவ கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. கொடியேற்றத்தை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் அதனைத் தொடர்ந்து கொடி மரத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் கொடியேற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஓலைச் சப்பரத்தில் வெள்ளி ரிஷப வாகன வீதி உலா காட்சி ஜூன் 4ம் தேதியும், தேரோட்டம் ஜுன் 6 ஆம் தேதியும், வைகாசி விசாக தீர்த்தவாரி உற்சவம் ஜுன் 9ம் தேதியும் நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், கிராம மக்ககள் செய்து வருகின்றனர்.