திருக்காட்டுப்பள்ளி, ஜூன் 19: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே ஒன்பத்துவேலியில் பகுதியில் வீட்டில் தூக்கிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஒன்பத்துவேலி பாலாஜி நகரை சேர்ந்தவர் தீனதயாளன் மகள் பூஜா (15). இவர் 9ஆம் வகுப்பு வரை படித்து வீட்டில் இருந்தார். காலையில் தாய் சித்ரா வேலைக்கு சென்று இருந்த நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு பூஜா தற்கொலை செய்து கொண்டாராம். அவரை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தாய் சித்ரா திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்று காவல் ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.