கோவை, ஜூன் 23: கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், செந்தில்குமார் வரவேற்றார். மாரிமுத்து தலைமை வகித்தார். மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் மாரப்பன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், மாவட்டத்தில் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். மதயானை நூல் திறனாய்வு கருத்தரங்கம் மற்றும் மண்டல மாநாட்டை ஜூலை இறுதி வாரத்தில் நடத்த வேண்டும். பாரதியார் பல்கலைக்கழகத்தில் கலைஞர் இருக்கை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தேன்மொழி, ஸ்தனிஸ்லாஸ், ரஹமத்ஷா, ஜவஹார், வேல்முருகள், ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.