மேட்டுப்பாளையம், ஆக.24: திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவை ஒட்டி பரப்பரை கூட்டம் நேற்று மாலை மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு மாவட்ட செயலாளர் அரங்கசாமி தலைமையில் மாவட்ட தலைவர் வேலுச்சாமி முன்னிலையில் நடைபெற்றது. இதில், திராவிடர் கழக தலைமை கழக பேச்சாளர்கள் புலியகுளம் வீரமணி, அன்புமதி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
அப்போது, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51ஏ (எச்) பிரிவு குறித்து விளக்கமாக பேசினர். இந்நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் தரும.வீரமணி, மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் சாலை வேம்பு சுப்பையன், இளைஞரணி தலைவர் வீரமணி, செயலாளர் பிரதீப், நகர தலைவர் பழனிச்சாமி, செயலாளர் சந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.