பெரம்பலூர், ஜூன் 10: பெரம்பலூர் அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் வைகாசி விசாக விழா நடைபெற்றது. இதையொட்டி தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாளித்து வரும் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியசுவாமிக்கு காலை 11 மணியளவில் பால்,தயிர்,சந்தனம், பழ வகைகளுடன், சிறப்பு அபிஷேகம் முடித்து மங்கள வாத்தியம் முழங்க மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்வில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன்,தின, வார,வழிபாட்டு குழுவினர் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அபிஷேகம், அலங்காரம் உபயங்களை கவிதாமணி செய்திருந்தார். நிகழ்ச்சி ஏற்பாடு செயல் அலுவலர் ரவிச்சந்திரன் செய்து வைத்தார். பூஜைகளை கௌரி சங்கர் சிவாச்சாரியார் செய்து வைத்தார். இதேபோல் அகரம்சீகூர் அருள்மிகு பால தண்டாயுதபாணி கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்பட்டது.வைகாசி விசாகத்தை முன்னிட்டு அருள்மிகு பால தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் அண்ணாதுரை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.