பாப்பாரப்பட்டி, ஜூன் 5: நாடாளுமன்ற தேர்தலில், திமுக அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, பாப்பாரப்பட்டியில் அனைத்து வார்டுகளிலும் உறுப்பினர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நகர செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் பிருந்தா நடராஜன் முன்னிலையில், கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வி, முனுசாமி, திருவேங்கடம், மல்லிகா, ராஜு, விஜய் ஆனந்த், தனசேகர், பத்மா சிவகுமார், தமிழ்ச்செல்வன், சரிதா குமார், மாவட்ட துணை அமைப்பாளர்கள் ராமமூர்த்தி, வீரமணி, ஐடி விங் ராகுல், பிரசாத், பிரவீண், குமார், ஸ்ரீஹரி ஆகியோர் இனிப்புகள் வழங்கினர். மாநில விவசாய அணி துணை பொறுப்பாளர் இன்பசேகரன் மற்றும் ஒன்றிய செயலாளர் மடம் முருகேசன் உடனிருந்தனர்.
திமுக வெற்றி கொண்டாட்டம்
62
previous post